ஆறு மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்த விமான டிக்கெட்டில் மாற்றம்; அலையவிட்ட வாடிக்கையாளர் சேவை – கடுப்பான பயணி !

SIA apologises
SIA

லியோனார்ட் என்ற பயணி, டிசம்பர் மாதம் ஜப்பானுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் தனது விமானங்களை ஜன. 10, 2022 அன்று முன்பதிவு செய்துள்ளார். லியோனார்ட், அவரது மனைவி, 70களின் பிற்பகுதியில் உள்ள வயதான பெற்றோர், ஐந்து மற்றும் ஒரு வயதுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு வீட்டு உதவியாளர் ஆகியோரை உள்ளடக்கிய குடும்பப் பயணமாக ஆண்டின் இறுதியில் (டிசம்பர்) மேற்கொள்ள இருந்தார்.

ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜூலை 6 அன்று, லியனார்ட் SIA இடமிருந்து ஒரு மின்னஞ்சல் ஒன்றைப் பெற்றுள்ளார், அதில் எந்தக் காரணமும் கூறப்படாமல் அவர் திரும்பும் விமானம் மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அவர் முன்பதிவு செய்தது டிசம்பர் 27 அன்று மாலை 4:40 மணிக்கு ஆனால் அதே நாளில் காலை 8:50 மணிக்கு முந்தைய விமானமாக மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜூலை 7 ஆம் தேதி SIA இடமிருந்து மற்றொரு மின்னஞ்சல் வந்துள்ளது, அதில் அவரது இருக்கைகள் premium economy இல் இருந்து economyக்கு தரமிறக்கப்பட்டதாகக்  அம்மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூலை 7 அன்று மாலை, லியானார்ட் SIA இன் வாடிக்கையாளர் சேவையை அழைத்தபோது, ​​அவர் தனது விமானத்தை ஒரே விமானத்திற்கு மாற்றினால், கூடுதல் செலவை அவர் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் அவர் தனது விமானங்களை ரத்து செய்தால் மட்டுமே முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவார் என்றும் SIA இன் வாடிக்கையாளர் சேவை அவரிடம் கூறியது. இறுதியில் SIA தனது விமானத்தை 10:55pmக்கு மாற்ற ஒப்புக்கொண்டது.

நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 11 அன்று SIA -வின் தொலைபேசி அழைப்பு மூலம் அவர் திரும்பும் விமானம் உறுதி செய்யப்பட்டது. மேலும் ​​அவருடைய இருக்கைகள் தரம் தாழ்த்தப்பட்டதற்கு எந்த இழப்பீடும் பெற மாட்டார்  என்றும், பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதால் ஏற்படும் கூடுதல் செலவுகள் குறித்தும் அவரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் SIA அவருக்கு 5,000 Krisflyer மைல்கள் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. குறைவான இழப்பீடு மட்டுமே தான் பெற்றதால்  இவ்வாறு செய்த SIAவின் வாடிக்கையாளர் சேவையை பகல் கொள்ளை என்று வேதனையில் குறிப்பிட்டார்.