சாங்கி விமான நிலையத்தில் பறவைகள் விமானத்தில் அடிப்படுவதை தடுக்க புதிய வழிமுறை!

SIA plane delayed after it strikes several birds while landing in Paris airport (Photo: Facebook/Liew)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் பாரிஸ் விமான நிலையத்தில் தரையிரங்கும் போது அதிகளவு பறவைகளை தாக்கியதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த விமானம் ஜுலை 11 ஆம் தேதி வியாழன் காலை பாரிஸில் தரையிரங்கிய போது விமான இறக்கைகளில் இரத்த கறை படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பறவைகள் விமானத்தில் மோதி இறப்பதை தடுக்க புதிய மிமிக்ரி ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதன் மூலமாக அதிக அளவிலான பறவைகள் விமானத்தில் மோதி இறப்பதை தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் விமான நிலையத்தில் பறவைகள் இறப்பு:

311 பயணிகளை சுமந்து சென்ற SQ336, Airbus A380 என்ற விமானம் Charles de Gaulle விமான நிலையத்தை வந்தடைந்த போது அநேக பறவைகளை தாக்கியதாக SIA செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் விமானத்தின் முகப்பு மற்றும் இறகுகள் பகுதிகளில் இரத்த கறை படிந்து இருந்தது.

அதன் பின்னர், தரை சோதனை செய்யப்பட்டு பிறகு துப்புறவு பணிகளை தொடர்ந்து SQ335 விமான சேவை 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.