சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் வேலை – கேபின் ஊழியர்களை பணியமர்த்த விரைவுபடுத்தப்படும் நடவடிக்கைகள்

SIA recruits more cabin workers pilots job vacancies

சர்வதேச நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விமான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்கியுள்ளதால் ,விமான நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துகின்றன.விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பயணிகளுக்கான சேவையை சிறப்பாக வழங்குவதற்கு புதிதாக ஊழியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மார்ச் மாதம் முதல் 800-க்கும் மேற்பட்ட கேபின் ஊழியர்களை பணியமர்த்தி உள்ளது. புதிதாக பணியமர்த்தப்பட்ட 5 ஊழியர்களில் 3 ஊழியர்கள் ,பணியிலிருந்து விலகிய முன்னாள் ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சுமார் 2000 கேபின் ஊழியர்களை பணி அமர்த்துவதற்கு தேசிய கேரியர் இலக்கு வைத்துள்ளது. சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால் ,விமானப் பயணத்திற்கான அதிகரித்து வரும் தேவையை எதிர்ப்பார்த்து ,ஊழியர்களை பணியமர்த்தும் செயல்பாட்டில் விரைந்து செயல்பட விரும்புவதால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அவர்களை பணியமர்த்துவத்தில் முனைப்புடன் செயல்படுவதாக தலைமை நிர்வாக அதிகாரி Goh Choon Phong தெரிவித்தார்.

பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் பணிபுரிந்ததால், அது அவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான நேரத்தை வைத்துள்ளதாக Goh கூறினார். 3200 விமானிகள் 11000 கேபிள் ஊழியர்களுடன் இயங்கிவந்த SIA ,செப்டம்பர் 2020இல் Scoot நிறுவனம் உட்பட கிட்டத்தட்ட 4300 பதவிகளைக் குறைத்து ஊழியர்களை வெளியேற்றியது.

SIA நிறுவனத்தில் உள்ள விமானிகளின் எண்ணிக்கை COVID-19 தொடங்குவதற்கு முன்பு இருந்ததை போலவே உள்ளது என்று அவர் கூறினார்