தொடர்ந்து அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து – SIA குழுமத்தின் அறிவிப்பு

SIA scoot passenger airlines travel singapore

விமானப் போக்குவரத்து மீண்டு வரும் நிலையில், SIA குழுமத்தின் பயணிகள் போக்குவரத்து மே மாதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த மே மாதத்தில் மட்டும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் ஸ்கூட்டில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் விமானப் போக்குவரத்து மீண்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு இருந்ததை விட 14 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மே மாதத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை அதன் முந்தைய மாதத்தை விட 17.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் SIA தெரிவித்துள்ளது.

மேலும் வட ஆசியாவைத் தவிர, அனைத்து வழித்தடங்களிலும் பயணத் தேவை அதிகரித்துள்ளது என்றும் SIA கூறியுள்ளது. மே மாதத்தில் கோவிட்-க்கு முந்தைய நிலையில் இருந்து 61 % அதிகரித்துள்ளது, இது முந்தைய மாதத்தை விட 4 % உயர்வு ஆகும்.

SIA, இந்தோனேசியாவில் உள்ள மேடானுக்கு தனது விமான சேவைகளை மே மாதத்தில் மீண்டும் தொடங்கியது. அதே நேரத்தில் Scootஉம் சீன நகரமான நான்ஜிங்கிற்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது. இதில் SIA 72 இடங்களுக்கும், ஸ்கூட் 46 இடங்களுக்கும் விமான சேவைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரலில் தனது எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் வருகை, புறப்பாடுகளில் கோவிட்-19 சோதனைக்கான தேவைகளையும் நீக்கியது.