சில விமான சேவைகளை மாற்றியுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – என்ன காரணம் ?

(Photo: SIA/FB)

அமெரிக்காவிற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் சில விமானங்களை மாற்றியுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தெரிவித்துள்ளது.

போயிங்கின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், கட்டுப்பாட்டாளர்களுடன் ஆலோசனையின் அடிப்படையிலும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மிதிவண்டி திருட்டு – ஆடவர் ஒருவரை தீவிரமாக தேடிவரும் போலீஸ்

அமெரிக்காவின் 5G மொபைல் கட்டமைப்பு, பாதுகாப்புக் கவலைகளை ஏற்படுத்திய பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்றிலிருந்து (20 ஜனவரி), சிங்கப்பூர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே டோக்கியோ வழியாக செல்லும் SQ11 மற்றும் SQ12 விமானங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதில் போயிங் 777-300ER விமானங்களுக்குப் பதிலாக Airbus A350-900 விமானம் இயக்கப்படும் என்று SIA கூறியுள்ளது.

சிங்கப்பூர்- நியூயார்க் இடையே செல்லும் SQ25, SQ26 விமானச் சேவைகளுக்கும் வேறு வகை விமானங்கள் பயன்படுத்தப்படுவதாக SIA கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை ஈஸி இல்லங்க… வேலையின்போதும் குழந்தையை சுமக்கும் ஊழியர் – கண்ணீர் விட்ட நெட்டிசன்கள்