எகிறிய விமான முன்பதிவுகள் – வரவிருக்கும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

sia-increase-flights-2024
(Photo: Singapore Airlines)

தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டம் (VTL) செப்டம்பரில் தொடங்கப்பட்டதிலிருந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குழுமம் அதன் SIA மற்றும் Scoot விமானங்களுக்கு கிட்டத்தட்ட 160,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.

இந்த முன்பதிவானது வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது கூறியுள்ளது.

இந்த வகையான கோவிட்-19 நோயாளிகளுக்கு கட்டணம் S$25,000 – MOH

அதாவது விமான பயணிகளின் எண்ணிக்கை, அடுத்த மாதத்திற்குள் 43 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கோ சூன் ஃபோங் தனது அரையாண்டு செயல்திறன் முடிவுகளில் தெரிவித்தார்.

மேலும், நவம்பரில் அதன் விமானங்களின் சேவை 80 சதவீதம் செயலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் 135 SIA மற்றும் ஸ்கூட் விமானங்கள் செயல்படுத்தப்படும், மேலும் அதன் 10 விமானக் குழுவினரில் ஒன்பது பேர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் S$427.6 மில்லியன் நிகர இழப்பை SIA பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவுச் சாலையில் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம் – இப்படியும் சிலர்