சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபை – இலங்கை இடையே ‘ஆஹா’ வர்த்தக ஒப்பந்தம்!

SICCI inked MoU with SLBC
SICCI inked MoU with SLBC

சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் உள்ள தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தக மற்றும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்த இலங்கை சிங்கப்பூர் வர்த்தக கவுன்சிலுடன் (எஸ்.எல்.பி.சி) நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யூ) கையெழுத்திட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்.சி.சி.ஐ துணைத் தலைவர் திரு பிரசூன் முகர்ஜி, எஸ்.எல்.பி.சி தலைவர் திரு ரோஹிதா மெண்டிஸ் மற்றும் எஸ்.எல்.எஸ்.பி.சி யின் முன்னாள் தலைவர் திரு ஷாமில் மெண்டிஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த சுமார் 50 பிரதிநிதிகள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள வணிக சமூக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.