உலாத்துவது போல் வாடிக்கையாளரின் குடையை எடுத்து சென்ற ஆடவர் – CCTV காட்சியில் பிடிபட்டார்

siglap-restaurant-man-steal-umbrella
Tasty Court Facebook

சிக்லாப்பில் (Siglap) உள்ள ஒரு உணவகத்தின் நுழைவாயிலில் ஒரு நிமிடத்திற்கும் மேலாக சுற்றித் திரிந்த ஆடவர் உணவகத்தின் கேமராவில் பிடிபட்டார்.

ஏன் அவர் இப்படி உலாத்துகிறார் என்று உற்று நோக்க, இறுதியில் அவர் நுழைவாயிலின் ஓரத்தில் சாய்த்து வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவரின் குடையை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை!

டேஸ்டி கோர்ட் என்ற உணவகத்தின் முகநூல் பதிவின்படி, டிசம்பர் 10ஆம் தேதி மாலை 3.14 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாக டேஸ்டி கோர்ட்டின் இரண்டாவது ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.

புகாரின்படி, அந்த குடையானது மதிய உணவுக்கு சரியாக 1 மணிக்கு வரும் வழக்கமான வாடிக்கையாளருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டுள்ளது.

குடையை காணவில்லை என அந்த வாடிக்கையாளர் கூறியதை அடுத்து, உணவகத்தின் சிசிடிவி காட்சிகள் சோதனை செய்யப்பட்டது.

அப்போது வெளியே சுற்றித்திரிந்த ஆடவர், ​​​​அதை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு மிக பெரிய போக்குவரத்து சந்தை “இந்தியா”