குளித்து முடித்த பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம் – ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி !

Glass door shatters

சிலோசோவில், பீச் ரிசார்ட்டில் தங்கியிருந்த பெண் மீது குளியல் கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததில் தலை மற்றும் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 16 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சுசியானா ஹமீத் என்ற 41 வயது பெண், தனது மகளின் 12வது பிறந்தநாளை முன்பகலில் கொண்டாடியுள்ளார், அன்றிரவு குளித்த பிறகு படுக்கைக்குச் செல்லும் போது கண்ணாடி ஷவர் கதவை இழுத்து மூட முயற்சித்துள்ளார், ஆனால்  கதவு சிக்கிக் கொண்டிருந்துள்ளது. இதனால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த தன் கணவரை உதவிக்கு அழைத்துள்ளார்.

 

ஒரு நொடியில் எல்லாம் தலைகீழாய் மாறியது, குளியல் கண்ணாடி கதவு முழுவதும் உடைந்து சிதறியது. தன்  கணவர் தனக்கு உதவ வருவதற்கு முன்பே இது நொடிப்பொழுதில் நிகழ்ந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார். தன்  கணவர் மெயின் பாத்ரூம் கதவைத் திறந்தபோது, கண்ணாடி தரையெங்கும் சிதறியுள்ளது.   அச்சமயம் அதிர்ஷ்டவசமாக, மெயின் கதவை தான் பூட்டாமல் இருந்ததை குறிப்பிட்டார். மேலும் ஆடை அணியாமல் இருந்ததால், அவளது கைகள், தலை மற்றும் மார்பில் கண்ணாடித் துண்டுகள் குத்தியதில் வெட்டுக் காயங்களால் ரத்தம் வந்தது.

 

பின்னர் ஆம்புலன்ஸ் வந்த பிறகு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலை 6 மணியளவில் கண்ணாடி துண்டுகளை வெளியில் எடுத்தனர். அவற்றை முழுவதுமாக அகற்றுவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. பின்னர் சுசியானாவுக்கு மொத்தம் ஐந்து நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.