பணியின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக Sin Eng துப்புரவு நிறுவனத்துக்கு S$190,000 அபராதம் விதிப்பு !!

Company fined S$190,000 after worker dies while carrying out tree cutting

பணியில் இருக்கும் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக Sin Eng துப்புரவு நிறுவனத்துக்கு S$190,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், Sin Eng துப்புரவு நிறுவனம் 62, கியம் ஹாக் ரோட்டில் 6 மரங்களை அகற்றியது.

அப்போது, இந்திய நாட்டைச்சேர்ந்த சின்னையா கணேசன் என்ற ஊழியர் ரம்பத்தால் மரத்தை அறுத்துக் கொண்டிருந்த போது கிளை ஒடிந்ததால் தவறி விழுந்தார். இதில் அவர் அணிந்திருந்த பாதுகாப்புச் சாதனங்கள் காரணமாகத் தரையிலிருந்து 23 மீட்டர் உயரத்தில் அவர் தொங்கிக் கொண்டிருந்தார்.

அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து சின்னையா கணேசனைத் தரையில் இறக்கினர். மார்பிலும், கழுத்திலும் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விபத்து நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தகுந்த பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ஊழியர்களின் பாதுகாப்புக்கு உரிய விதிகளை நிறுவனம் பின்பற்றவில்லை என்றும், அவசர சிகிச்சைக்கான நடவடிக்கைகளின் போது நிறுவனம் வேகமாகச் செயல்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின் கீழ் Sin Eng Cleaning Service நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.