தவறுதலான அடிப்படையில் வேலையில் இருந்து தூக்கப்பட்டாக கோரிக்கைகள்!

Pic: Today/ File

சிங்கப்பூரில் தவறுதலாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஆண்டுதோறும் வரும் கோரிக்கைகளில், சுமார் 130 கோரிக்கைகள் சமரச நடவடிக்கைகள் இன்றி வேலை சார்ந்த கோரிக்கைகள் நடுவர் மன்றங்களுக்கு அனுப்பப்படுவதாக மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் (Koh Poh Koon) தெரிவித்துள்ளார்.

வேலை சார்ந்த நடுவர் மன்றங்களுக்கு அனுப்பப்படும் கோரிக்கைகள் நியாயப்படுத்த முடியாதவை என தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் Employment Pass அனுமதிக்கு புதிய புள்ளிகள் முறை – வாங்க அதுபற்றி பார்ப்போம்!

வேலை சார்ந்த நடுவர் மன்றங்களுக்கு வரும் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நீதிபதி நிராகரித்திருப்பார் அல்லது அவை நடுவர் மன்ற விசாரணையில் மீட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் என துணையமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

டிஏடிஎம் எனும் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி மறுத்த பணிநீக்கம் தொடர்பிலான கோரிக்கைகள் குறித்து பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ இந்த பதிலை அளித்தார்.

சிங்கப்பூரில் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – புதிய விண்ணப்பம், புதுப்பித்தலுக்கு பொருந்தும்