வெளிநாட்டு மருந்துவரை பணியில் அமர்த்திய 12 கிளினிக்குகள் மீது குற்றச்சாட்டு.!

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

சிங்கப்பூரில் உரிய வேலை அனுமதி இல்லாத வெளிநாட்டு மருத்துவரை பணியில் அமர்த்திய காரணத்திற்காக 12 கிளினிக்குகள் (clinics) மீது நேற்று (ஜூலை 29) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள கிளினிக்குகளில் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் முதல் 2019ம் ஆண்டு மே வரை குவெக் கியென் கெங் (Queck Kian Kheng) என்ற மருத்துவர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள்… அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்பு!

வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின் கீழ், சிங்கப்பூரில் உள்ள 12 கிளினிக்குகள் மீது 2 முதல் 8 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், KK Queck Neurology Centre எனும் தன் சொந்த கிளினிக் ஒன்றை டாக்டர் குவெக் கியென் நடத்தி வருவதாக Mount Alvernia மருத்துவமனையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தில், அவர் மருத்துவ நிபுணராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். அவர் மலேசியா மற்றும் பிரிட்டனில் படித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது கூறப்படவில்லை.

உரிய வேலை அனுமதி இல்லாத வெளிநாட்டு மருத்துவரை பணி அமர்த்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிளினிக்குகளுக்கு 20,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தேசிய மேம்பாட்டு அமைச்சக கட்டிடத்தில் நள்ளிரவில் தீ விபத்து.!