சிங்கப்பூரின் 74வது நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்ட சிலோசோ கோட்டை; அதன் சிறப்பம்சம் என்ன.?

Pics: National Heritage Board

செந்தோசாவின் மேற்கு முனையில் அமைந்துள்ள சிலோசோ கோட்டை சிங்கப்பூரின் 74வது நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலோசோ கோட்டை

புலாவ் பிலாக்காங் மத்தியின் (தற்போது செந்தோசா மேற்கு முனை) கடலோரப் பகுதியில் உள்ள கப்பல் துறைமுகத்தைப் பாதுகாக்க 1878ஆம் ஆண்டு சிலோசோ கோட்டை கட்டப்பட்டது.

இரண்டாம் உலகப் போரைப் பிரதிபலிக்கும் விலையுயர்ந்த துப்பாக்கிகள், வலுவான ராணுவக் கட்டமைப்புகள், சுரங்கப்பாதைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களைச் இது கொண்டுள்ளது.

பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும், பிற்காலத்தில் சரணடைந்த ஜப்பானிய வீரர்களுக்கும் போர்க் கைதிகளின் முகாமாக இந்த சிலோசோ கோட்டை செயல்பட்டது. செந்தோசாவின் மேற்கு முனையில் அமைந்துள்ள சிலோசோ கோட்டை போரின்போது சிங்கப்பூர் தன்னைக் காத்துக்கொண்ட கதையைச் எடுத்துரைக்கிறது.

50 ஆண்டுகள் சிறப்பான உறவை கொண்டாடும் சிங்கப்பூர் – பங்களாதேஷ்: வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வாழ்த்து!

சிறப்பம்சம்

1942ஆம் ஆண்டு ஜப்பானியர்களுக்கு எதிரான போரின்போது சிங்கப்பூர் பாதுகாப்பிற்கு சிலோசோ கோட்டை முக்கிய பங்கு வகித்துள்ளது. சிலோசோ கோட்டை சிங்கப்பூர் நிலப்பரப்பில் இல்லாத முதல் நினைவு சின்னமாகும்.

சிலோசோ கோட்டையின் உள்ள 11 சின்னங்களில், நான்கு துப்பாக்கித்தளங்கள், துப்பாக்கிகளுக்குக் கீழே நிலத்தடி தோட்டாக்களாக செயல்பட்ட மூன்று சுரங்கப்பாதை வளாகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

74வது தேசிய நினைவுச்சின்னம்

ஜப்பானியர்களிடம் சிங்கப்பூர் சரணடைந்த 80ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக, சிலோசோ கோட்டையின் 11 கட்டமைப்புகள் 74வது தேசிய நினைவுச்சின்னமாகப் அறிவிக்கப்பட்டுள்ளது என தேசிய மரபுடைமைக் கழகம் நேற்று (பிப்.15) தெரிவித்துள்ளது.

ஒரே இடத்தைச் சேர்ந்த 11 கட்டமைப்புகள் அரசிதழில் தேசிய நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சிலோசோ வரலாற்றுச் சிறப்புமிக்க கடலோரத் துப்பாக்கிகளை சிங்கப்பூரர்கள் மீண்டும் பார்வையிட அழைப்பதாக செந்தோசா வளர்ச்சிக் கழகத்தின் உதவி தலைமை நிர்வாகி மைக்கேல் மாஹ் கூறியுள்ளார். சிலோசோ கோட்டைக்குச் செல்ல கட்டணங்கள் ஏதும் இல்லை.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் போது எவ்வளவு தங்க நகை போட்டு வரலாம்? பலபேரை உச்சத்துக்கு கொண்டு சென்ற சூட்சமம்!