பிப்ரவரி 15- ஆம் தேதி தொடங்குகிறது சிங்கப்பூர் விமானக் கண்காட்சி!

Photo: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் உள்ள சாங்கி கண்காட்சி மையத்தில் (Changi Exhibition Centre) வரும் பிப்ரவரி 15- ஆம் தேதி அன்று ‘SINGAPORE AIRSHOW- 2022’ என்ற பெயரில் விமானக் கண்காட்சி தொடங்குகிறது. பிப்ரவரி 18- ஆம் தேதி வரை நடைபெற உள்ள விமானக் கண்காட்சியில் பல்வேறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இடம் பெறுகின்றனர். அத்துடன், சிங்கப்பூர் விமானப் படை வீரர்கள் விமான சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். 300- க்கும் மேற்பட்ட விமானத்துறைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துக் கொள்கின்றனர்.

Credit Suisse வங்கியால் தனக்கு 1 மில்லியன் டாலருக்கு மேல் நஷ்டம்; நீதிமன்றத்தில் மூதாட்டி வழக்கு.!

பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே விமானக் காட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் இணையதளங்கள் மற்றும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை சிங்கப்பூர் விமானப் படை செய்துள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விமானக் காட்சி நடத்தப்படுகிறது. இந்த விமானக் காட்சியில் முதன்முறையாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான தேஜஸ் விமானம் இடம் பெறுகிறது.

விமானக் கண்காட்சி நடைபெறுவதால், சாங்கி கண்காட்சி மையத்திற்கு அருகில் உள்ள சில சாலைகள் பொதுமக்கள் மற்றும் பொது போக்குவரத்திற்காக மூடப்பட்டிருக்கும். அதேபோல், மேலும் சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 4- ஆம் தேதி முதல் பிப்ரவரி 22- ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பின்னர், பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று காலை 06.00 மணி முதல் இந்த சாலைகளில் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் லித்துவேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

விமானக் கண்காட்சி தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.singaporeairshow.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.