SIA விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்! – போர்விமானங்களின் உதவியுடன் சாங்கி விமானத்தில் தரையிறங்கிய விமானம்

Pic: AFP
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 37 வயதான நபர் செப்டம்பர் 28 அன்று கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்திறங்கிய SIA விமானம் வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளானது.மேலும்,மிரட்டல் விடுத்தவர் வெளிநாட்டவர் என்று தெரியவந்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து எஸ்க்யூ 33 விமானம் இரவு பத்து மணிக்குமேல் புறப்பட்டது.வெடிகுண்டு மிரட்டலுக்குப் பின்,அந்த விமானம் F-16 ரக போர் விமானங்களின் உதவியுடன் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து நேற்று அதிகாலை 2:40 மணிக்கு மேல் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.விசாரணைக்குப் பிறகு இந்த மிரட்டல் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் இது குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டார்.வெடிகுண்டு இருப்பதாக ஆடவர் கத்தியதால் நான்கு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அந்தப் பயணி கூறினார்.
விமானத்தில் நடத்தப்பட்ட பாதுகாப்பு பரிசோதனைக்குப் பின்னர் காலை 9 மணிக்கு மேல் முனையம் 3-க்கு விமானம் வந்தது.பதற்றமான சூழ்நிலையை வ விமானப் பணியாளர்கள் திறம்பட கையாண்டதாக பயணிகள் தெரிவித்தனர்.