சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது

SIA apologises
SIA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சந்தேகத்தில் 37 வயது பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் விமான கேபின் பணியாளர்களைத் தாக்கியதாகவும், தனது பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி மிரட்டியதாகவும் போலீசார் இன்று புதன்கிழமை (செப். 28) தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியின் 7 அறையில் இடிந்து விழுந்த மேற்கூரை: 100 பேர் வெளியேற்றம் – ஊழியர்களின் நிலை?

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் SQ33 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக நள்ளிரவு 2.40 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அந்த ஆடவர் விமான குழுவினர் உதவியால் தடுக்கப்பட்டார். அவர் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்தது, மேலும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் உட்கொண்டதாக சந்தேகித்தின்பேரிலும் போலீசார் அவரை கைது செய்தனர்.

காலை 5.50 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது என MINDEF தெரிவித்துள்ளது.

வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு