விமானச் சேவையில் சிக்கல்களைக் எதிர்கொள்ளும் சிங்கப்பூர் விமான நிலையம் – பாதிப்பு ஏற்படுமா?

Changi Airport Facebook

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையம் அடுத்த அதன் சில நாட்களுக்கு
விமானங்களின் நேரத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனைகளை சிங்கப்பூர் ரத்து செய்தது நாம் அறிந்த ஒன்று தான்.

“சிங்கப்பூரை விட்டு சென்ற ஊழியர்கள் சொந்த நாட்டில் வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.. சிங்கப்பூர் ஊழியர்களின் பிணைப்புகளை பலப்படுத்தியுள்ளது”

இந்நிலையில், ரமலான் பண்டிகை காலம் என்பதால் பயணத்திற்கு மிகவும் பிஸியான நேரமாக இந்த கால கட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையம் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்வதால், வரும் வாரத்திற்கான சில கூடுதல் விமான விண்ணப்பங்களை விமான நிலையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதிகமான விமான சேவை, பயணிகளின் சேவை தரத்தை மோசமாக்கும் என்றும், உடமைகளை சேகரிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்ற கவலைகள் இருப்பதாகவும் இது பற்றிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வார இறுதி அதிக பயணிகள் கொண்ட உச்சக் காலம் என்றும், அதற்கான விமானங்களை விரிவுபடுத்துவதற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களின் மறுநேரம் (re-timing) இருக்கும் என்றும் சாங்கி விமான நிலையக் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் பிசினஸ் டைம்ஸிடம் கூறினார்.

“அதிகமான பொருளாதார சவால்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்” – பிரதமர் லீ!