சிங்கப்பூர் – அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு – இஸ்தானாவில் சந்தித்தித்து பேசிய விவரம்

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா அவரது முகநூல் பக்கத்தில் இஸ்தானாவில் அமெரிக்கப் பேராளர்களைச் சந்தித்தது மற்றும் இருநாடுகளுக்கும் இடையே கல்வியியல்,மக்கள் தொடர்பிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் பதிவிட்டார்.காலநிலை மாற்றம் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பை வரவேற்றதாகவும் தெரிவித்தார்.

இஸ்தானாவில் பிரதமர் லீ சியென் லூங்கையும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனையும் அக்குழுவினர் சந்தித்து பேசினர்.இந்தோ-பசிபிக் வட்டாரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கக் குழு, முதலாவதாக சிங்கப்பூருக்கு வந்துள்ளது.
இந்தச் சுற்றுப் பயணத்தின்போது தென்கொரியா,மலேசியா,ஜப்பான், ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்க நாடாளுமன்றப் பேராளர் குழு செல்லவிருக்கிறது.

இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பு போன்ற திட்டங்கள் மூலம் இவ்வட்டாரத்தில் அமெரிக்காவின் பொருளியல் ஈடுபாட்டை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இருதரப்பும் விவாதித்தன.