50 ஆண்டுகள் சிறப்பான உறவை கொண்டாடும் சிங்கப்பூர் – பங்களாதேஷ்: வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வாழ்த்து!

சிங்கப்பூர், பங்களாதேஷின் முன்னணி முதலீட்டாளர்களில் முக்கியமான நாடாக உள்ளது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

சிங்கப்பூரின் வளர்ச்சி உட்பட, சிங்கப்பூரில் வசிக்கும் பங்களாதேஷ் நாட்டினரின் பங்களிப்புகளையும் பாராட்டுவதாக அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று (பிப். 16) தெரிவித்தார்.

சிங்கப்பூரில் மூடப்பட்ட 2,200 கட்டுமான நிறுவனங்கள் – வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பங்களாதேஷ் அதிபர் முகம்மது அப்துல் ஹமீதுக்கு அதிபர் ஹலிமா வாழ்த்துக் கடிதம் ஒன்று எழுதினார்.

அதில், 1972 ஆம் ஆண்டு பங்களாதேஷுடன் உறவுகளை ஏற்படுத்திய முதல் தென்கிழக்கு ஆசிய நாடு சிங்கப்பூர் என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளும் பிப்ரவரி 16, 1972 அன்று தங்கள் உறவுகளை தொடங்கின, அதிலிருந்து இன்றுடன் 50வது ஆண்டு நிறைவு பெறுகிறது.

அப்போதிலிருந்து, இருதரப்பு உறவுகள் நல்லமுறையில் நன்மை பயக்கும் வகையில் தொடர்ந்து வளர்ந்து செழித்து வருகின்றன என்று அதிபர் ஹலிமா கூறினார்.

சிங்கப்பூரில் கோவிட்-19 “ATM”… வேற லெவல் – அப்படி அதன் பயன் தான் என்ன?