ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்குள் நுழைய பயணிகளுக்கு அனுமதி – ட்விட்டரில் தெரிவிக்கப்பட்ட விதிவிலக்குகள்

Canva

சிங்கப்பூருக்குள் நுழையும் குறுகியகால பார்வையாளர்களுக்கு தற்பொழுது,பயண காப்பீடுகள் தேவைப்படுகிறது. இதன் குறைந்தபட்ச கவரேஜ் 30000 சிங்கப்பூர் டாலர்களாகும் .ஆனால், எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நில எல்லை வழியாக சிங்கப்பூர் அல்லது மலேசியாவிற்குள் நுழையும் குறுகிய கால பார்வையாளர்கள் Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை முழுமையாக பெற்றிருந்தால் பயண காப்பீடு தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து புதுப்பித்தது. இதனை தொடர்ந்து சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் புதன்கிழமை மாலை இதற்கு விளக்கம் அளித்தது.

மலேசியாவைப் பொறுத்தவரை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் Cause Way மற்றும் இரண்டாவது நாட்டிலுள்ள நிலை எல்லை வாயிலாக பயணம் செய்யும் குறுகியகால பார்வையாளர்கள் முழுமையாக Covid-19 தடுப்பூசி பெற்றிருந்தால் பயணக் காப்பீடு அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. மலேசியாவின் சுகாதார அமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடு விலக்குகளை ட்விட்டரில் புதன்கிழமை தெரிவித்தது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முழுமையாக covid-19 தடுப்பூசி பெற்ற பயணிகள் தனியார் போக்குவரத்து மூலம் நில எல்லையைக் கடப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.மேலும் 1-ஆம் தேதி முதல் இரண்டு நாடுகளும் கட்டுப்பாடுகளை நீக்குகின்றன. பகுதி அளவு தடுப்பூசி பெற்ற மற்றும் தடுப்பூசியின் பெற்றுக்கொள்ளாத பயணிகள் குறைந்தபட்சம் 20,000 USD காப்பீட்டில் Covid-19 பயண காப்பீட்டை வாங்க வேண்டுமென்று மலேசியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.