சிங்கப்பூர், நியூயார்க் இடையே நேரடி விமான சேவையை வழங்கவிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், வரும் மார்ச் 28- ஆம் தேதி முதல் அமெரிக்க நாட்டின் நியூயார்க்கில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் (Newark Liberty International Airport) இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையை வழங்கவுள்ளது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்து நியூயார்க்கிற்கு நேரடி விமான சேவையையும் வழங்கவுள்ளது.

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

முன்னதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 57 வாராந்திர விமான சேவையை அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு வழங்கி வந்த நிலையில், கொரோனா சூழல் காரணமாக அதன் எண்ணிக்கையை மூன்றாகக் குறைத்ததாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் ஜூன் மாதத்திற்குள் இவ்வழித்தடத்தில் வாரந்தோறும் 62 விமான சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது. நாள்தோறும் நெவார்க் லிபர்ட்டி விமான நிலையத்திற்கு மூன்று விமான சேவைகள் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ‘Mr and Mrs Mohgan’s Super Crispy Roti Prata’ கடை மீண்டும் திறப்பு!

சுமார் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், கனடா நாட்டின் வான்கூவருக்கு (Vancouver) விமான சேவையை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க்கில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி VTL விமான சேவையை வழங்கவுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம். பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home#/ என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.