சிங்கப்பூர், பினாங்கு இடையே ‘VTL’ விமான சேவை- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), சிங்கப்பூரில் இருந்து இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் VTL மற்றும் Non-VTL விமான சேவையை வழங்கி வருகிறது.

சிங்கப்பூரில் வெளிநாட்டவரிடம் கத்தி முனையில் 50,000 வெள்ளி கொள்ளை முயற்சி.!

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர், பினாங்கு (Penang) இடையே VTL விமான சேவை வழங்கப்படும் என்று ஸ்கூட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஸ்கூட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மார்ச் 17- ஆம் தேதி முதல் சிங்கப்பூர், மலேசியா நாட்டின் பினாங்கு இடையே இரு மார்க்கத்திலும் VTL விமான சேவை வழங்கப்படும். அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த விமான சேவை தினசரி விமான சேவை ஆகும். VTL விமான சேவையில் பயணிக்கும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்!

பயண டிக்கெட் முன்பதிவு, விமான பயணச் சேவை தொடர்பான அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இதே வழித்தடத்தில் Non- VTL விமான சேவையை ஸ்கூட் நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.