சிங்கப்பூர், புனோம் பென் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது கம்போடியா ஏர்வேஸ்!

Photo: Changi Airport Official Facebook Page

சிங்கப்பூர், புனோம் பென் (Phnom Penh) இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது கம்போடியா ஏர்வேஸ் விமான நிறுவனம் (Cambodia Airways). சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனோம் பென் நகருக்கும், புனோம் பென் நகரில் இருந்து சாங்கி விமான நிலையத்திற்கு வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு விமான சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.cambodia-airways.com/#/main/home/booking என்ற கம்போடியா ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.

இந்த வழித்தட விமான பயணத்திற்கு ஆரம்பக் கட்டணமாக 76 டாலரை நிர்ணயித்துள்ளது விமான நிறுவனம்.

திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஸ்ரீ சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள்!

இதனிடையே, சாங்கி விமான நிலையத்தில் நவம்பர் 5- ஆம் தேதி அன்று கம்போடியா ஏர்வேஸ் விமான தரையிறங்கிய நிலையில், “சாங்கி விமான நிலையத்திற்கு கம்போடியா ஏர்வேஸை வரவேற்கிறோம்” என்று சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.