திருச்சி- சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து உச்சத்தைத் தொட்டது!

Singapore passengers-trichy-airport

 

கொரோனா காலத்தில் சர்வதேச விமான போக்குவரத்து கடும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா, கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

‘ஹவ்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து’- குடியிருப்பாளர்களைக் காப்பாற்ற உதவியர் மருத்துவமனையில் அனுமதி!

குறிப்பாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட், இண்டிகோ ஏர்லைன்ஸ், உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமான சேவை வழங்கி வருகின்றன. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, மற்ற நாடுகளுடன் நடைபெற்று வரும் விமானப் போக்குவரத்துடன் ஒப்பிடும்போது, திருச்சி- சிங்கப்பூர் இடையே விமானப் போக்குவரத்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

இந்த நிதியாண்டில் ஒட்டு மொத்தமாக, திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற 11 லட்சத்து 34 ஆயிரத்து 33 பயணிகளில், சுமார் 4 லட்சத்து 26 ஆயிரத்து 78 பயணிகள் சிங்கப்பூர் பயணிகள் ஆவர். இது 37.6 சதவீதமாகும்.

ஜோகூர் பாரு நெடுஞ்சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே ஏர்பஸ் 321 வகை விமானத்தை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில் சுமார் 236 பயணிகள் அமர முடியும். இந்த விமான சேவையை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருவதால், வரும் செப்டம்பர் மாதங்கள் வரையிலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.