சிங்கப்பூரில் அடுத்த மாதம் வரை கோவிட்-19 கட்டுபாடுகள் செயல்படுமென அறிவிப்பு!

foreigner fined warning spore
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றின் பரவல் தற்போது அதிகரித்து வருவதால், சுகாதார பராமரிப்பு துறையின் செயல்படும் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கோவிட்-19 கட்டுபாடுகள் அடுத்த மாதம் வரை செயல்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சரியாக நவம்பர் 21ம் தேதி வரை இக்கட்டுபாடுகள் நடைமுறையில் இருக்குமென சுகாதார துறையின் அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றினால் வீழ்ச்சி கண்ட நிறுவனங்கள் எழுச்சிப் பெற MOH பங்களிப்பு!

மருத்துவமனைகளில் உள்ள 1650 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளில், 90% மேற்பட்ட படுக்கைகள் உபயோகப்படுத்தப்பட்டு வருவதால் மேற்கொண்டு வரும் தொற்று பரவல் உறுதிசெய்யப்பட்டவர்களை கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

கோவிட்-19 தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனை ஊழியர்களின் வேலைகளும், சுகாதாரத்துறை ஊழியர்களின் வேலைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மேலும், 200 படுக்கைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் 150க்கு மேற்பட்ட படுக்கைகள் ஏற்கனவே உபயோகத்தில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த நெருக்கடிச் சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும், தனது அமைச்சு செயல்படுத்தி வருகிறது.

ஆனால் அதற்கு சிறிது காலஅவகாசம் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக கட்டுபாடுகளின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களுக்குப் பின் இந்த கோவிட்-19 தொற்றிற்கான கால நீட்டிப்பு பற்றி மறு ஆய்வு செய்து மாற்றப் படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

வழக்கம் போல் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் சில கட்டுப்பாடுகளும், உணவு மற்றும் பானக் கடைகளில் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே அமர்ந்த சாப்பிட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து இப்படியே இருக்க போவதில்லை என்றும், தொற்று பரவலின் எண்ணிக்கையைக் கொண்டும், அப்போதைய சூழ்நிலைகளைப் பொருத்து மாறும் என்றும் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

இக்கட்டுபாடுகளால் நெருக்கடிக்குள்ளாகும் நிறுனங்கள் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக S$640 மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களிடையே தாெற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த ஒருசில நாட்களிலிருந்து தடுப்பூசிகள் போடுவது கூடுதலாக்கப்படும். இதனால் மீண்டும் கொடிய நிலையில் சிக்கிக் கொள்வதிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்றார் அவர்.

எனவே மக்கள் அனைவரும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். இக்கட்டுபாடுகள் தொடர்ந்து நீடிக்கப்போவதில்லை.

பரவல் குறைந்து நெருக்கடி நிலைகள் சரியானதும் மறு பரிசீலனை செய்து கண்டிப்பாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் மேலும் 16 பேர் உயிரிழப்பு!