பெட்டியைக் காணோம் – லண்டனில் ஒப்படைத்த பெட்டி இன்னும் சிங்கப்பூர் வந்து சேரவில்லை

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

சிங்கப்பூர் வரும் பயணிகள் விமான நிலையத்தில் தங்களது உடைமைகளைப் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக பயண சேவையை கையாளும் (Sats) தெரிவிக்கிறது.பயணிகளின் பணப்பெட்டிகளைக் காணவில்லை என்றும் அந்த பெட்டிகள் சேதமடைந்திருப்பதாகவும் புகாரளித்து வருகின்றனர்.

உலகளவில் மனிதவளம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் பயணிகள் விமான நிலையங்களில் அசௌகரியங்களை உணருகின்றனர்.பெரும்பாலான விமான நிலையங்களில் இது போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.இருந்தாலும் சிங்கப்பூரிலும் ஆசியாவிலும் உள்ள விமான நிலையங்களில் இது போன்ற சிரமங்கள் நிகழாவண்ணம் கண்காணிக்கப்படுகிறது.இங்கிருந்து புறப்படுவோரின் உடைமைகள் பத்திரமாகவே அனுப்பி வைக்கப் படுகின்றன.

சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இங்கும் உடைமைகள் தொடர்பான பிரச்சனைகள் எழக்கூடும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.ஒரே நேரத்தில் எத்தனை பயணிகள் வந்தால் சமாளிக்க இயலும் என்ற அடிப்படையில் விமானங்களின் கால அட்டவணை,விமானங்களின் எண்ணிக்கை குறித்து விமான நிறுவனங்களுடனும் விமான நிலையத்துடனும் (Sats) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

லண்டனில் பயணத்தை தொடங்கி இணைப்பு விமானம் மூலமாக சிங்கப்பூர் வந்திறங்கிய ஆசிரியர் யோகேஸ்வரி பணப்பெட்டியைக் காணாமல் தவித்தார்.லண்டன் விமான நிலையத்தில் அவர் ஒப்படைத்த பணப்பெட்டி இங்கு வந்து சேரவில்லை.சுமார் $1000 மதிப்புள்ள பொருள்கள் அந்தப் பெட்டியில் இருப்பதாகவும்,அது இங்கு வரவில்லை என்று அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.