உவாக்..! சிங்கப்பூரில் சிறுநீரில் இருந்து பீர் தயாரிப்பு – எந்த பிராண்டு தயாரிப்பில் இப்படி நடக்கிறது தெரியுமா?

NEWater என்ற நிறுவனம் புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் பீர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

சிங்கப்பூரில் கழிவுகளை கொண்டு பீர் தயாரிக்கும் முறையை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

இந்நிறுவனம் கழிவில் இருந்து பீர் தயாரிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இது போன்ற பல புதிய முயற்சிகள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் நீல புரட்சி என்ற பெயரில் நீர் மேலாண்மை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நீர் மேலாண்மை சிங்கப்பூரின் அத்தியாவசி தேவையாக உள்ள நிலையில், மறுசூழற்சி செய்யப்பட்ட நீரைக் கொண்டு 40 சதவீதம் அரசு பூர்த்தி செய்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2060இல் 55 சதவீதமாக உயரும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புதிய பிராண்டின் 95 சதவீத தயாரிப்புகள் இந்த NEWater நீரில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

இது சர்தேச பாதுகாப்பு தரத்துடன் கூடியதாகவும், பீர் தயாரிப்பு ஏற்ப தூய்மையானதாகவும் உள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த நீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பீரில் தேன், பார்லி மால்ட், யீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.