சிங்கப்பூர் வந்தவுடன் இனி கோவிட் நெகடிவ் சான்றிதழை காட்ட தேவையில்லை – மேலும் பல மாற்றங்கள் இன்று முதல்…

Migrant workers vital to Singapore economy
Photo: Migrant Workers' Centre Official Facebook Page

சிங்கப்பூர்: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள் இனி சிங்கப்பூர் வந்தவுடன் நெகடிவ் சான்றிதழை காட்ட தேவையில்லை.

இந்த புதிய நடைமுறை இன்று பிப்ரவரி 13 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சிங்கப்பூர் முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் சிங்கப்பூர் நுழையும் பயணிகள் இனி தங்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை.

அது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும்.

மேலும், குறுகிய கால பயணிகள் முழு தடுப்பூசி போடவில்லை என்றாலும் காப்பீடு வாங்கவும் தேவையில்லை.

இந்த அறிவிப்பு வெளிநாட்டு பயணிகள், ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.