திருச்சி to சிங்கப்பூர்.. விமானத்தில் கோளாறு – என்ன நடந்தது ?

IndiGo flight returns Singapore baggage error
Twitter Page

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தோனேசிய விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

நேற்று மே 11 ஆம் தேதி புதன்கிழமையன்று சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து எரியும் துர்நாற்றம் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து அதன் பணியாளர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து, இந்தோனேசிய விமான நிலையத்திற்கு IndiGo A320ceo விமானம் திருப்பி விடப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக விமானி அருகில் உள்ள குலானாமு விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார்.

இது குறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில், இந்த விமானம் விரிவான ஆய்வுக்காக குலானாமுவில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அங்கேயே தங்குமிடம் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், பயணிகளை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் அங்கு அனுப்பட்டதாகவும், அதனையடுத்து அவர்கள் சிங்கப்பூர் வந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானத்தில் பறவைகள் மோதி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்கிறது.