பட்ஜெட் 2021: தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு வேலைவாய்ப்பு ஆதரவு திட்டம் நீட்டிக்கப்படும்!

(Photo: Yahoonews)

சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்றுநோயால் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு வேலைவாய்ப்பு ஆதரவு திட்டம் நீட்டிக்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் இன்று (பிப்ரவரி 16) தெரிவித்தார்.

ஊழியர்களின் சம்பளத்திற்கு மானியம் வழங்குவதன் மூலம் வேலைகளைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் வேலைவாய்ப்பு ஆதரவு திட்டம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முகக்கவசம் அணிய மறுத்து கடைக்காரர் மேல் ஸ்ட்ராவ் வீசிய ஆடவர் கைது..!

COVID-19 தொற்றிலிருந்து மீள்வதற்கு சுமார் S$11 பில்லியன் நிதி ஒதுக்கப்பட உள்ளது, இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வதற்கான உடனடி பணிகளை மேற்கொள்ள உதவும் என்று திரு ஹெங் கூறினார்.

சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்டம் குறித்த அறிவிப்பில் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியெட் அதனை கூறினார்.

இது மூன்று அம்சங்களில் கவனம் செலுத்துகிறது:

  • ஊழியர்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்தல்
  • பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல்
  • இன்னும் தடுமாற்றத்தில் இருக்கும் துறைகளுக்கு உதவி வழங்குதல்

சிங்கப்பூரில் 10 நுழைவுவாயில்களில் உயரும் ERP சாலைக் கட்டணம்..!