S Pass, ஒர்க் பெர்மிட் உடைய கட்டுமானம், கடல் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு VTL விண்ணப்ப அனுமதி இல்லை

Work permit foreign workers Construction company
Pic: Today/File

S Pass மற்றும் ஒர்க் பெர்மிட் உடைய கட்டுமானம், கடல் தளம் மற்றும் செயல்முறை துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இன்று சனிக்கிழமை (டிச 4) இரவு 11.59 மணி முதல் VTL ஏற்பாடு வழியாக சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு புதிய விண்ணப்பங்களைச் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இது தங்கும் விடுதிகளில் பணிபுரியும் work pass வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Omicron மாறுபாடு பற்றிய கவலை: மலேசியா-சிங்கப்பூர் இடையே VTL திட்டம் தொடருமா?

மலேசியர்கள் மற்றும் work pass அனுமதி வைத்திருக்கும் பெண்கள் VTL வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய இன்னும் அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் நடைமுறையில் உள்ள சுகாதார நெறிமுறைகளுக்கு உட்பட வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியது, ஏனெனில் இந்த ஊழியர்கள் பொதுவாக தங்கும் விடுதிகளில் வசிப்பதில்லை.

கட்டுமானம், கடல் கப்பல் மற்றும் செயல்முறைத் துறைகளில் பணிபுரியும் S Pass மற்றும் ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்கள், அதே போல் தங்கும் விடுதிகளுக்கு உட்பட்ட ஊழியர்கள், work pass வைத்திருப்பவர்களுக்கான பொதுப் பாதை வழியாக வர வேண்டும் என்று அமைச்சகம் கூறியது.

“upstream testing” மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மூலம் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழையலாம் என்றும் கூறியுள்ளது.

VTL வழியாக சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு இதற்கு முன்னதாக ஒப்புதல் பெற்ற ஊழியர்கள், VTL வழி சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் வருகையின்போது கோவிட்-19 PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் மற்றும் முடிவுகளுக்காக காத்திருக்கும்போது சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், இதில் நெகடிவ் சோதனை முடிவை பெற்றவர்கள், ஐந்து நாள் ஆன்-போர்டிங் திட்டத்தின் மூலம் செல்வார்கள். மேலும் விவரங்கள் முதலாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் என்று MOM கூறியது.

மனைவி தவறான நிலையில் இருக்கும் அந்தரங்கப் படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஆடவருக்கு சிறை