22.02.22ஐ கொண்டாடிய சிங்கப்பூர்…அடேங்கப்பா நேற்று ஒரே நாளில் இவ்வளவு திருமணமா.?

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய அதிசிய தேதியான 22.02.2022ஐ இடது அல்லது வலது புறத்தில் இருந்து வாசித்தாலும் வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும். இந்த அதிசிய தேதியை ஆங்கிலத்தில் பாலின்டிரோம் தினம் என அழைப்பர். எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளலாம் என்பதால் இதுபோன்ற தேதியில் பலர் திருமணம் செய்துகொள்ளவார்கள்.

இந்த அதிசிய தேதியை மேலும் சிறப்புக்குரியதாக ஆக்கும் வகையில், சிங்கப்பூரில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மணமுடிக்க முடிவு செய்திருந்ததாக கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷூவெலிங் முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தேதியில் எல்லா எண்களும் இரட்டைப்படை என்பதால் இது வெற்றியைக் குறிக்கும் நாள் என்பது சீனர்களின் நம்பிக்கை. இந்தச் சிறப்புகளுடன் நேற்றைய நாள் செவ்வாய்க்கிழமை என்பதும், சந்திரமுறை நாள்காட்டியில் 22வது நாளைக் குறிப்பதாகவும் நேற்றைய தினம் திருமண உறுதி எடுத்துக்கொண்ட டிலேன் லின் என்பவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் திருமணங்களை நடத்தி வைக்கும் ஜோனா போர்டில்லா என்பவர் கூறுகையில், நேற்று அதிசிய தேதி என்பதால் திருமண தேவை அதிகமாக இருந்தது என்றும், நேற்று ஒரே நாளில் மட்டும் 11 திருமணங்களை நடத்தி வைக்க வேண்டி இருந்தது என்றும், எனது 15 ஆண்டுகால திருமண சேவையில் இது சொந்த சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார்.