தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சிங்கப்பூர் துணைத் தூதர் சந்திப்பு!

Photo: Tamilnadu Minister Udhayanidhi Stalin Official Twitter Page

ஜனவரி 12- ஆம் தேதி அன்று காலை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரின் மகனும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை, சென்னையில் உள்ள இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் துணைத் தூதர் பாங் ஸே சியோங் எட்கர் நேரில் சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூரில் இருந்து வந்த ஊழியரை ஆயுதம் கொண்டு கடுமையாக தாக்கிய இருவர்

இந்த சந்திப்பு குறித்து, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் உள்ள சிங்கப்பூர் நாட்டின் துணைத் தூதர் பாங் ஸே சியாங் எட்கர் அவர்கள் இன்று என்னைச் சந்தித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிங்கப்பூர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும், தமிழ்நாட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் – போலீசார் விசாரணை

இந்த சந்திப்பின் போது, சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள், தமிழக அரசின் உயரதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.