சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2 மீண்டும் திறக்கப்படுகிறதா? – முக்கிய அம்சங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம்

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2 மீண்டும் திறக்கப்படுவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் மே 29-ம் தேதி அன்று தொடங்கும். இனி வரக்கூடிய காலங்களில் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பதற்காக விமான நிலையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சாங்கி விமான நிலையத்தின் செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக விமான நிலையத்தின் முனையம் 2 மூடப்பட்டுள்ளது. விரிவாக்கப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் பணிகள் முழுமையாக நிறைவடையும் போது ,பயணிகளின் போக்குவரத்து அதிகமாகும்.

விமான நிலைய விரிவாக்கம் விமான நிலையத்தின் திறனை ஒரு ஆண்டுக்கு 5 மில்லியனிலிருந்து 28 மில்லியன் பயணிகள் வரை அதிகரிக்கும். விமான நிலையத்தின் முக்கிய புள்ளிகளான வருகை குடியேற்றம், பேக்கேஜ் க்லைம் பெல்ட்டுகள் மற்றும் முனையத்தின் தெற்கு பகுதியில் உள்ள வாயில்கள் ஆகியவை விமான செயல்பாடுகளுக்கு தயாராக இருக்கும் என்று (CAG) சாங்கி விமான நிலையம் குழுமத்தின் தலைவர் டான் லை டெக் கூறினார்.

அதிக அளவு பயணிகள் விமான நிலையத்தில் வருகை புரிவதால் ,தானியங்கு குடியேற்ற பாதைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று விமான நிலையத்தின் செய்தி வெளியிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தானியங்கு குடியேற்ற பாதைகள் மற்றும் சிறப்பு உதவி பாதைகள் கொண்ட ஒரு பெரிய குடிவரவு கூடம் இருக்கும்.

பயோமெட்ரிக் மற்றும் முக கருவிழிகளை பதிவு செய்த சிங்கப்பூரர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சிங்கப்பூர் வந்தவுடன் அதைச் செய்ய தகுதியுள்ள வெளிநாட்டவர்களுக்கு தானியங்கு குடிவரவு பாதைகள் சேவைகளைச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது .