சிங்கப்பூர் சிறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!

File Photo

சிங்கப்பூர் நாட்டில் மலேசியாவைச் சேர்ந்தவரும், இந்திய வம்சாவளியுமான கல்வந்த் சிங் (Kalwant Singh), கடந்த 2013- ஆம் ஆண்டு காவல்துறையினருடன் சிக்கினர். அவருடன் மொஹம்மத் யாசிட் (Mohamad Yazid bin Md Yusof)  என்பவரும் காவல்துறையிடம் சிக்கியுள்ளார். அவர்கள் இருவரிடம் இருந்தும் போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுமார் 60.13 கிராம் எடைக் கொண்ட டயமார்ஃபின் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். மேலும், 120.9 கிராம் போதைப்பொருள் சிங்கப்பூருக்குள் கடத்தி வந்ததாக கல்வந்த் சிங் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அத்துடன் அவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தானா மேரா, டெசாரு இடையேயான படகுச் சேவை தொடங்கியது!

அதில், போதைப்பொருள் கடத்தலில் நோராஷரி (Norasharee) என்பவர் மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அவரை தீவிரமாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கடந்த 2015- ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கைதான மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான கல்வந்த் சிங், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டது போதைப்பொருள் என்பது தெரியாது; ஓரிடத்தில் பொருளைப் பெற்றுக் கொண்டு, மற்றொரு இடத்தில் அதைக் கொண்டு சேர்ப்பது மட்டுமே தனது வேலை, எனவே, தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதே விளக்கத்தையே மொஹம்மத் யாசிட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், மொஹம்மத் யாசிட்டின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அதேபோல், கல்வந்த் சிங்கின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், கடந்த 2016- ஆம் ஆண்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன், நோராஷரி என்பவருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

“காணாமல் போன 60 வயது முதியவர் கண்டுபிடிக்கப்பட்டார்”- சிங்கப்பூர் காவல்துறை தகவல்!

ஜூலை 7- ஆம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று கல்வந்த் சிங்கிற்கு முறைபடி, நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனை அறிந்த கல்வந்த் சிங் அதிர்ச்சியும், சோகத்தில் ஆழ்ந்தனர்.

கல்வந்த் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த புதன்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூரின் துணை தூதரகம் முன்பு மனித உரிமை ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில், ஜூலை 7- ஆம் தேதி அன்று காலை சிங்கப்பூர் சாங்கி சிறையில் கல்வந்த் சிங் மற்றும் நோராஷரி ஆகிய இருவரும் திட்டமிட்டப்படி தூக்கிலிடப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 27- ஆம் தேதி அன்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளியான நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார்.

ரயிலில் ஏற்பட்ட பழுதால் 15 நிமிடம் தாமதம் – பயணிகள் அவதி !

சிங்கப்பூர் சட்டப்படி, 15 கிராமுக்கு அதிகமாக போதைப்பொருளைக் கடத்துப்பவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.