சீன மக்களின் விருப்பமான நாடுகளில் “சிங்கப்பூர்” முதலிடம் – சிங்கப்பூர் வர அதிகம் விரும்பும் சீனர்கள்: ஆய்வு

Singapore-top-list
@coleenr/Unsplash & @smilepig0906/Instagram

சீனாவைத் தவிர்த்து, தற்போது சீன மக்களின் விருப்பமான நாடாக சிங்கப்பூர் உள்ளது என்று சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகமான குளோபல் டைம்ஸ் (GT) தெரிவித்துள்ளது.

அது தொடர்பான கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 14 சதவீதம் பேர் சிங்கப்பூரை மிகவும் விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

ஜன. 1 முதல் சிங்கப்பூரில் இருந்து செல்ல முடியாது – தடை விதித்த நாடு

மேலும், அந்த வரிசையில் கனடா கடைசி இடத்தை பிடித்துள்ளது. பதிலளித்தவர்களில் 0.4 சதவீதம் பேர் மட்டுமே இந்த நாட்டை விரும்புவதாகக் கூறினர்.

இந்த பட்டியலில், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மாலத்தீவுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன.

சீனக் குடிமக்கள் தாம் சிங்கப்பூருக்கு அதிகம் செல்ல விரும்புவதாகவும், மேலும் மாலத்தீவு மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, 2018ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் முதல் ஆறு இடங்களில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மது போதையில் பேருந்து ஓட்டுநர், போலீசிடம் ரகளை – இந்தியருக்கு சிறை