நிலவழி VTL மூலம் டிசம்பர் 20 முதல் மலேசியாவுக்குள் நுழையலாம்!

LIANHE ZAOBAO

தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் குடிமக்கள் அடுத்த வாரம் (டிசம்பர் 20) முதல் காஸ்வே வழியாக மலேசியாவுக்குள் நுழைய முடியும்.

சிங்கப்பூர்-மலேசியா ஆகிய இரு நாடுகளும் தனிமை இல்லாத பயணத் திட்டத்தை தரை வழியில் விரிவுபடுத்துகின்றன.

இரும்புக் கம்பி மொத்தமாக விழுந்ததில் உடல் நசுங்கி வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்!

அதேபோல், தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசியர்கள் இரு நாடுகளுக்கும் இடையே விரிவாக்கப்பட்ட நில வழி தடுப்பூசி பயண பாதை (VTL) திட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தலின்றி காஸ்வே வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

தற்போதைய நிலவரப்படி, ​​நாட்டின் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் மட்டுமே நில வழி VTL திட்டத்தின்கீழ் பயணிக்க முடியும்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சோதனை நெறிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று வர்த்தக, தொழில் அமைச்சகம் (MTI) செவ்வாய்கிழமை (டிசம்பர் 14) தெரிவித்துள்ளது.

மேலும், “சிங்கப்பூரில் நுழையும் அனைத்து பயணிகளும் நடைமுறையில் உள்ள சோதனை நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும்” என்று MTI கூறியது.

சிங்கப்பூரில் மூன்று ஆடவர்களை தேடி வரும் காவல்துறை!