சிங்கப்பூரில் குடியுரிமை பெற இதல்லாம் தேவை.. ஆங்கிலம் முக்கியமா?

singapore-ranks-fifth-least-corrupt-country
Photo via Nigel Chua

சிங்கப்பூரில் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி தகுதி பெற ஆங்கில தேர்வு முக்கியம் என்ற பேச்சி தற்போது சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது.

ஆங்கிலம் முக்கியம் என்பது குறித்து முன்னர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது நாம் அறிந்தது தான். அதனை எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஆங்கிலத் தேர்வு குறித்து சிங்கப்பூரர்கள் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை பெற ஆங்கிலத் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும் என்று 80 சதவீத மக்கள் கருத்து கூறியுள்ளனர்.

ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்றும் 52% மக்கள் கூறியுள்ளனர்.

அதே போல ஆங்கிலத்தில் பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என 41% பேர் கருத்து கூறினர்.

மேலும் முக்கிய பண்பாக…

ஆங்கில உரையாடல் திறன் இருக்க வேண்டும் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டும் என முறையே 51 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக சிங்கப்பூரில் குடும்பம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்தாய்வை CNA நடத்தியது குறிப்பிடத்தக்கது, இதில் 18 – 69 வயதுக்கு உட்பட்டோர் கலந்துகொண்டனர்.