அடடே!ஆர்ச்சர்ட் சாலை இவ்ளோ தூய்மையாக இருக்கிறதே! – வெளிநாட்டு ஊழியர்களின் துப்புரவுப் பணி

People seen walking along Orchard Road in Singapore on Mar 29, 2022. (Photo: CNA

சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலையில் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ள பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.சாதாரணமாகவே,சிங்கப்பூரில் சாலைகள் சுத்தமாக இருக்கும்.இந்நிலையில் மேலும் கடைப்பகுதிகள் உள்ள சாலையை தூய்மையாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Singapore Clean Day எனும் தினத்தையொட்டி அப்பகுதியில் வசிப்பவர்கள்,தொண்டு ஊழியர்கள்,வெளிநாட்டு ஊழியர்கள் என்று சுமார் 300 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.அகற்றப்பட்ட குப்பைகளில் பெரும்பாலும் சிகரெட் துண்டுகளும் நெகிழிப் பைகளுமே அதிகமாக இருந்துள்ளன.Orchard Central, 313@somerset, Centrepoint ஆகிய கடைத் தெருக்களில் உள்ள குப்பைகளை பங்கேற்பாளர்கள் அப்புறப்படுத்தினர்.

தூய்மைச் சேவைக்கு பொதுச் சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்தது.தூய்மைப் பணியில் அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதால் ஆர்ச்சர்ட் சாலையும் கடைப்பகுதிகளும் தூய்மையாக இருப்பதாக அமைப்பு கூறியது.பாதசாரிகள்,வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் குப்பையை விட்டுச்செல்லாமல் இருப்பதில் அதிக கவனம் தேவை என்றும் அமைப்பு அறிவுறுத்தியது.

சிங்கப்பூரில் பொது இடங்களை தூய்மையாக வைத்திருந்தால் நாட்டைச் சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிங்கப்பூரைப் பற்றி நல்ல எண்ணம் உருவாகும் என்று கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் ஆல்வின் டான் கூறினார். சிங்கப்பூரை தூய்மையாக வைத்திருக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் அவர் கூறினார்.