சிங்கப்பூரில் கனமழை மற்றும் காற்று குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.!

Temperatures in Singapore to fall as low as 22°C in first week of December 2019

சிங்கப்பூரில் அடுத்த டிசம்பர் மாதத்தின் முதல் பாதியில் மழை மற்றும் காற்றையும் எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூரில் அடுத்த மாத தொடக்கத்தில்வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு சேவை சிங்கப்பூர் (MSS) தெரிவித்துள்ளது.

அடுத்த மாத தொடக்கத்தில் சிங்கப்பூரில் மிதமான மற்றும் பலத்த மழை பரவலான பெய்யும், மேலும் அவ்வப்போது காற்றும் வீசும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 2 முதல் 4 நாள்கள்வரை கனத்த மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அப்போது வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸுக்கும் 30 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கலாம். அதனைத் தொடர்ந்து 5 முதல் 7 நாள்கள்வரை இடியுடன் கூடிய மழையையம் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது.

சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்யும் என்று முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.