எல்லைகளை மீண்டும் திறப்பது சிங்கப்பூரின் கடமை; துணை பிரதமர்.!

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

சிங்கப்பூர் அதன் பொருளியல் மற்றும் எல்லைகளை உலகின் பிற நாடுகளுக்கு மீண்டும் திறப்பதற்கான கடமையை கொண்டுள்ளது என துணைப் பிரதமர் திரு. ஹெங் ஸ்வீ கீட் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று உலக அளவில் அதிகரித்து வந்தாலும், தனிமைப்படுத்திகொள்ளும் உத்தரவின்றி சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடுப்பூசி போட்டோருக்கான VTL பயணப்பாதைத் திட்டத்தைச் சிங்கப்பூர் செயல்படுத்தி இருப்பது அதன் கடமையை எதிரொளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை அனுமதிக்கும்போது, மேலும் பல நாடுகளுக்கு VTL பயணப்பாதை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார். கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள், கூடுதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன என்றும் அனைத்துலக விமானப் பயணகளை மீண்டும் தொடங்குவதில் சிங்கப்பூர் தன் பங்கை ஆற்ற கடமை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 550 பேர் தாக்கப்பட்டுள்ளனர்…

சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2022 தொடக்கவிழாவில் கலந்து கொண்டு பேசிய துணைப் பிரதமர் ஹெங், நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதில் சிங்கப்பூர் கொண்டுள்ள கடமை இந்நிகழ்ச்சிக்கு மற்றோர் எடுத்துக்காட்டு என்றும்கொரோனா பரவல் காரணமாக முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் விமானக் கண்காட்சி இந்த ஆண்டு சிறிய அளவில் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் 2021ல் ஏற்பட்ட சாலை விபத்துகள், மரணங்கள் எவ்வளவு தெரியுமா?