சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது தெரியுமா?

சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது தெரியுமா?
Photo: Singapore In India

 

சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளை செய்துள்ளது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

பெண்களின் மறைவு பகுதிகளை காணொளி எடுத்து சிக்கி கொண்ட ஓட்டுநர்

ஜனவரி 07, 08 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ (Tamil Nadu Global Investors Meet- 2024) நடைபெற்றது. இந்த மாநாட்டை அந்த மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா, டாடா, அதானி, ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்து தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

அந்த வகையில், சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப், கேப்பிட்டாலேண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடுகளைச் செய்துள்ளனர். சுமார் 40,000 கோடியை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் S$1.17 மில்லியன் ஜாக்பாட் பரிசைத் தட்டி தூக்கிய அதிஷ்டசாலி – துள்ளிக்குதித்து ஆரவாரம்

மாநாட்டின் முடிவில் சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் உடன் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இதனிடையே, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தூதரர் சைமன் வோங் (Simon Wong), தமிழ்நாட்டின் பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து கொண்டு பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கும், முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கும், சிங்கப்பூர் தூதரகக் குழுவுக்கும் சிங்கப்பூர் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.