இரும்பு கட்டமைப்பு விழுந்து இந்திய ஊழியர் மரணம்: கட்டமைப்பு எடை 560கி… நிறுவனத்துக்கு செக்

tuas-worker-company-fined
Google Maps

இரும்பு கட்டமைப்பு கவிழ்ந்து விழுந்த விபத்தில் 39 வயதான தமிழக ஊழியர் முனியன் முருகன் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவர் வேலை செய்த ஹை லெக் இன்ஜினியரிங் & கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கு கடந்த ஜூலை 10 அன்று S$200,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு புதிய சாதனை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்

வேலையிடத்தில் ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதால் ஊழியர் இறந்ததாக அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முனியன் முருகன் என்ற அவர், ஹை லெக் இன்ஜினியரிங் & கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் லிஃப்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார்.

2020ஆம் ஆண்டு அக்டோபர் 11, அன்று வேலையிடத்தில் ஸ்டீல் பிரேம் கட்டமைப்பு கவிழ்ந்து மேலே விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, முருகனும் மற்ற மூன்று ஊழியர்களும் வேலையிடத்திலிருந்து துவாஸில் உள்ள ஆலைக்கு கனரக எஃகுப் பொருட்களைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கட்டமைப்பு கீழே விழும்போது அங்கிருந்த இன்னொரு ஊழியர் சரியான நேரத்தில் குதித்தார், ஆனால் முருகன் மீது அது விழுந்து தாக்கியது. அதன் எடை சுமார் 560 கிலோ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு தலை, முதுகுத்தண்டு, விலா எலும்பு, இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியற்றில் கடும் காயம் ஏற்பட்டு இறந்தார் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் வேண்டும்… 6 நிறுவனங்களுக்கு சிறப்பு அனுமதி