Sriwijaya விமான விபத்து: “மீட்புப்பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்” – பிரதமர் லீ

Singapore condolences Indonesia Sriwijaya
Sriwijaya Air crash: Singapore leaders send condolences to Indonesian counterparts (PHOTO: Achmad Ibrahim / AP)

ஸ்ரீவிஜயா விமானம் கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது, அதற்கு சிங்கப்பூர் தலைவர்கள் இந்தோனேசிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப் இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவுக்கு (Joko Widodo) கடிதம் ஒன்றை எழுதினார்.

சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மழைப்பொழிவு!

அதில், சிங்கப்பூர் மக்கள் சார்பாக, இந்தோனேசியா மக்களுக்கு இந்த வருத்தத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிபர் ஹலிமா குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் லீ சியென் லூங், அதிபர் விடோடோவுக்கு எழுதிய கடிதத்தில், இந்த கடினமான நேரத்தில் இந்தோனேசியா மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாக்கு தேவைப்பட்டால் தொடர்ந்து தேடும் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயாராக உள்ளதாகவும் திரு லீ கூறினார்.

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடிக்கு கடிதம் எழுதினார்.

அதில், உதவ முடியுமா என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த தயவுசெய்து தயங்க வேண்டாம் என்று அமைச்சர் கூறினார்.

சிறப்புப் பயண ஏற்பாட்டுத் திட்டத்தில் இவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…