COVID-19: டான் டோக் செங் மருத்துவமனையுடன் தொடர்புடைய ஒருவர் மரணம்

(Photo: Tan Tock Seng Hospital/ Facebook)

டான் டோக் செங் மருத்துவமனையில் (TTSH) குழுமத்துடன் தொடர்புடைய 88 வயது பெண் ஒருவர் கோவிட் -19 தொடர்பான மருத்துவ சிக்கல்களால் உயிரிழந்தார் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரரான அவர், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறு, பக்கவாதம் மற்றும் ஹைப்பர்லிபிடீமியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

தோ பயோவில் 15 வயது சிறுவனை வெட்டியதாக சந்தேகத்தின்பேரில் 4 ஆடவர்கள் கைது

இந்த இறப்புடன் சேர்ந்து சிங்கப்பூரின் மொத்தம் 31 பேர் COVID-19 காரணமாக உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மருத்துவமனையின் வார்டு 9D-ல் சேர்க்கப்பட்டிருந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொற்று 28ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.

TTSH நோய்பரவல் குழுமம் சிங்கப்பூரில் முதல்முறையாக மருத்துவமனையில் ஏற்பட்ட குழுமம் ஆகும், தற்போது 16 COVID-19 பாதிப்புகளுடன் மிகப்பெரிய நோய்ப்பரவல் குழுமமாக அது உள்ளது.

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மாற்றங்கள்!