இவர்களிடம் இழந்துவிட வேண்டாம்.. சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் – கதறும் ஆடவர்!

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online

கிரிப்டோ கரன்சி எனப்படும், இணைய வழியில் வாங்கப்படும் நாணயத்தில் மிகப்பெரிய அளவிலான மோசடி நடந்து வருகிறது.

சொற்ப வருமானம் ஈட்டும் வெளிநாட்டு பணியாளர்களை குறிவைத்து, அதில் முதலீடு செய்தால், உடனே பல மடங்கு பணம் பெருகும் என ஆசை தூண்டப்படுகிறது.

அது பார்க்க வர்த்தக முதலீட்டு திட்டங்கள் போல இருக்கும். உண்மையில் மக்களை ஏமாற்ற உருவாக்கப்பட்ட மோசடி திட்டங்கள் அவை என சிங்கப்பூர் போலீசார் தெரிவிக்கின்றனர்.

அந்த போலி அறிக்­கை­களில் உள்ள இணைப்­பு­களை கிளிக் செய்­தால் அது வேறு இணை­யப்­பக்­கங்­க­ளுக்­கு உங்களை கொண்டு செல்­லும்.

அந்த இணை­யப்­பக்­கங்­களில் தங்­கள் தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைப் பதிவு செய்ய சொல்லி கேட்கும்.

அதில் உங்களது விவரங்களை கொடுத்த உடனே திட்­டத்­தின் பிர­தி­நி­தி­கள் எனக் கூறிக்கொண்டு ஒரு சிலர் தொலை­பேசி மூலம் அழைப்­பார்கள்.

அவர்களின் பேச்சு மூளை சலவை செய்யும் படி இருக்கும். முத­லீடு தொடர்­பாக எவ்­வித முடி­வை­யும் எடுப்­ப­தற்கு முன்பு சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் இணை­யப்­பக்­கத்­துக்­குச் சென்று தக­வல்­க­ளின் நம்­ப­கத்­தன்­மையை உறுதி செய்­து­கொள்­ளும்­படி காவல்­ து­றை­யி­னர் கேட்­டுக்­கொள்­கின்­ற­னர்.

இது­போன்ற மோசடி அறிக்­கை­கள் சிலவற்றில் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் ஆகி­யோ­ரின் பெயர்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

அவற்றை நம்ப வேண்­டாம் என  போலீசார் தங்­கள் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்டு பொது­மக்­களை எச்­ச­ரித்­த­னர்.