பெற்ற மகளிடம் அப்பா செய்யும் காரியமா இது! – சிங்கப்பூரில் தாய் இறந்த பிறகு தந்தைக்கு கிடைத்த தண்டனை!

more-singaporeans-plan-vacations-goal-sleep
Unsplash
சிங்கப்பூரில் 44 வயதான நபர்,தனது 14 வயதுடைய மகளை 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு இடையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியக் குற்றத்திற்காக 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சட்டப்படி அதிகபட்சமாக 24 பிரம்பு அடிக்கும் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.அதே ஆண்டில் மேலும் பல பாலியல் ஊடுருவல் மற்றும் கற்பழிப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.இது போன்ற எட்டுக் குற்றச்சாட்டுகள் தண்டனையின் போது கருத்தில் கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் அக்டோபர் 2019 இல், அவரது தங்கையுடன் அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது படுக்கையறைக்குள் நுழைந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.இந்த வன்முறைச் செயல் அதே ஆண்டு நவம்பரில் மீண்டும் தொடர்ந்தது.மீண்டும் டிசம்பர் 2, 2019 அன்று, அவர் செய்த போது மனைவியால் பிடிபட்டார்.
அவர் தனது மகளின் படுக்கைக்கு அருகில் நிர்வாணமாக இடுப்பிலிருந்து கீழே மண்டியிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.ஆத்திரமடைந்த மனைவி கடுமையாக அவரை அடித்தார்.

அந்த 14 வயது பெண் தாக்குதலின் போது தூங்குவதுபோல் நடித்ததாகக் கூறப்படுகிறது.அவளது தந்தை அவளை விட வலிமையானவன் என்று எண்ணி பயப்படுவதால் அவனை எதிர்க்கவில்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பெண்ணின் தாயிற்கு தெரியவந்த பிறகு பாலியல் ஊடுருவல் நடைபெறவில்லை.பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பம் தனது தந்தையை பொருளாதார ரீதியாக நம்பியிருப்பதாக உணர்ந்ததால் பாலியல் வன்கொடுமைகளைப் புகாரளிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததோடு நோய்வாய்ப்பட்ட தாயை கவலைப் படுத்த வேண்டாம் என்று எண்ணியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவளது உடன்பிறப்புகளும் உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாயார் மார்ச் 2021 இல் காலமானார்.
குற்றவாளியின் குழந்தைகளே அவரை வெறுத்துள்ளனர்.தந்தை என்றால் குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்க வேண்டுமே தவிர சலனத்தால் சீரழிக்கக் கூடாது என்பது தந்தையாகிய ஒவ்வொருவருக்கும் புரிவது அவசியம்.