மலேசியாவில் துணை பிரதமர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு சிங்கப்பூர் துணைப் பிரதமர்கள் வாழ்த்து!

lawrence wong says about foreign workers
PHOTO: MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION

மலேசியா நாட்டின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, டிசம்பர்- 10 ஆம் தேதி அன்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவைப் பதவியேற்றுக் கொண்டது.

இந்த மாத்திரைகளைத் திருடி என்ன செய்கிறார் இந்த முதியவர்? – கைவரிசையைக் காட்டியவருக்குச் சிறை!

அதன்படி, 27 பேர் மலேசியாவின் துணை அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல், மலேசியாவின் துணைப் பிரதமர்களாக டாக்டர் அகமது சாஹித் ஹமிடி (Dr Ahmad Zahid Hamidi), ஹஜி ஃபாடில்லா பின் ஹஜி யூசுஃப் (Haji Fadillah bin Haji Yusof) ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மலேசிய நாட்டு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா முன்னிலையில் அனைத்து அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை எடுத்துக் கொண்டனர்.

இந்திய ஊழியர் மரணம்: கிரேன் விழுந்து உடல் நசுங்கிய சோகம் – முழு விவரம்

இந்த நிலையில், மலேசியாவின் புதிய துணைப் பிரதமர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அகமது சாஹித் ஹமிடி, ஃபாடில்லா யூசுஃப் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்து சிங்கப்பூரின் நிதித்துறை அமைச்சரும், துணை பிரதமருமான லாரன்ஸ் வோங் மற்றும் துணைப் பிரதமரும், பொருளாதாரக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் ஸ்வீ கியட் ஆகியோர் தனித்தனியே நேற்று (14/12/2022) கடிதம் எழுதியுள்ளனர்.

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான ஆழமான உறவைக் கடிதத்தில் சுட்டிக்காட்டிய சிங்கப்பூர் துணைப் பிரதமர்கள், கொரோனா காலகட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு நினைவுக் கூர்ந்தனர். மலேசியத் துணைப் பிரதமர்களைச் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.