சிங்கப்பூர் விமானத்துறையை மாற்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.!

Pic: AFP

சிங்கப்பூர் விமானத்துறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இதர தீர்வுகளை நடைமுறைப்படுத்தவும், நச்சுவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் விமானத் துறையை நீடித்த நிலைத்தன்மை உடையதாக மாற்றும் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் விமானத்துறை நீடித்த நிலைத்தன்மை அம்சத்தில் அவசரமாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், கொரோனா பரவல் காலத்திற்கு முன் உலகளவில் வெளியேற்றப்பட்ட நச்சுவாயுவில் 2 விழுக்காடு விமானத்துறைக்குச் சொந்தமானது என்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் கோவிட்-19 “ATM”… வேற லெவல் – அப்படி அதன் பயன் தான் என்ன?

சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஈஸ்வரன், விமானத்துறை இயங்கத் தொடங்கும்போது சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போல் நச்சுவாயு வெளியேற்றம் தொடர்ந்து அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம் என கூறினார்.

மேலும், நீடித்த நிலைத்தன்மை கொண்டதாக விமானத்துறையை மாற்றத் தேவைப்படும் முதலீட்டைக் கணிப்பது சவாலான ஒன்று என்றும், இந்த முயற்சிக்குச் செய்யவேண்டிய செலவை அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் திட்டம் ஆராயும் என்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

மசாஜ் பார்லரில் பணிபுரியும் பெண்களின் தவறான செயல்… கட்டாயப்படுத்தியதாக போலீசை அழைத்த இரு ஆடவர்கள்!