ஓடி ஓடி உழைத்து முதலிடம் பிடித்த சிங்கப்பூர் – என்னது அமெரிக்க நகரங்களை பட்டியலிலிருந்து பின்னுக்கு தள்ளியதா?

Steve Ding/Unsplash

Covid-19 வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கின. தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவை ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தியது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டில் வீட்டிலிருந்தபடியே தொலைதூரத்தில் வேலை செய்ய சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

சமீபகாலமாக வீட்டிலிருந்தபடியே பணிபுரிவது பலரது வாழ்வில் அதிக செலவுகளை குறைப்பதால் ஊழியர்கள் பெரும்பாலானோர் தொலைதூர பணியையே விரும்புகின்றனர். எனவே இன்றைய காலத்தில் தொலைதூர பணி செய்யக்கூடிய வகையில் உள்ள வேலைகளை அதிகம் கொண்ட நகரங்களின் பட்டியல் குறித்த ஆய்வினை அணுகல் கட்டுப்பாட்டு வழங்குனரான kisi நடத்தியது.

ஒவ்வொரு நகரத்திலும் தொலைதூரத்தில் செய்யக்கூடிய வேலைகளின் சதவீதமும், அனைத்து துறைகளுக்கும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் குறிகாட்டிகளில் அடங்கும்.

ஆய்வின்படி ,சிங்கப்பூரில் பணிபுரியும் மக்கள் தொகையில் 16.9 விழுக்காடு ஊழியர்கள் அதிக வேலையில் உள்ளனர். ஒரு ஆண்டுக்கு ஒரு ஊழியர் சராசரியாக 12 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்கிறார். ஆனால் சிங்கப்பூரில் ஒரு ஊழியருக்கு குறைந்தபட்ச ஊதிய விடுப்பாக ஏழு நாட்கள் வழங்கப்படுகிறது என்று ஆய்வு கூறுகிறது.

ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் முழுநேர ஊழியர்களின் விழுக்காடு அடிப்படையில் தரவரிசை படுத்தப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. 52.06 விழுக்காடு தொலைதூர வேலைவாய்ப்புகள் உடன் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. வாஷிங்டன் மற்றும் ஆஸ்டின் ஆகிய இரண்டு அமெரிக்க நகரங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.